‛ஜனநாயகன்' படத்திற்கு சான்று அளிக்க சொன்ன உத்தரவுக்கு தடை : சிக்கலில் விஜய் படம் | அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | ராஜ்குமார் பெரியசாமி படத்திற்காக ஸ்டைலிஷாக மாறும் தனுஷ் | ரசிகர்களை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்ற பிரபாஸ் | விஜய், பிரபாஸை ஓவர்டேக் செய்த சாரா அர்ஜுன் | கலைக்கல்லூரியில் டாக்டர்களை தேடிய ஸ்ரீலீலா | பொங்கலுக்கு வருகிறது திரவுபதி 2 | ஆஸ்கருக்கு தேர்வான ‛டூரிஸ்ட் பேமிலி, காந்தாரா சாப்டர் 1, மகாவதார் நரசிம்மா' | ‛பராசக்தி'க்கு போட்டியாக ‛மஹாசக்தி' | மீண்டும் ஆயிரம் கோடி வசூலை எட்டுவாரா பிரபாஸ் |

விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து வருபவர் பரீனா. இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த போது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பரீனா, கர்ப்ப காலத்தில் எடுக்கும் போட்டோஷூட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் விமர்சனங்களையும், அறிவுரைகளையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியின் சக நடிகையான ரீமாவுடன் சேர்த்து கொண்டு பரீனா குத்தாட்டம் போட்டுள்ளார். இன்ஸ்டாவில் அதை பார்க்கும் நெட்டீசன்கள் வயிற்றில் குழந்தையுடன் இப்படியா ஆட்டம் போடுவது? என பரீனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.