‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களும் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, ஓடிடியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நிரூப், பாலா, ரம்யா, ஜூலி மற்றும் அபிராமி ஆகியோர் பைனல் போட்டியில் டைட்டில் பட்டத்தை வெல்ல விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், கடைசி வாரம் என்பதால் ஏற்கனவே கலந்து கொண்ட போட்டியாளர்கள் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த வகையில் அனிதா சம்பத், ஷாரிக், தாடி பாலாஜி, அபிநய் ஆகியோர் பிக்பாஸ் வீட்டினுள் நுழைகின்றனர். இவர்களை வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்கள் உற்சாகமாக வரவேற்கும் காட்சிகளும், அனைவரும் சேர்ந்து ஜாலியாக டாஸ்க் விளையாடும் காட்சிகளும் ப்ரோமோவாக தற்போது வெளியாகி வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட்டின் பைனல் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இம்முறை டைட்டில் பட்டத்தை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.