மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… |
விஜய் டிவி தொலைக்காட்சி நடிகர்களை ஊக்குவிக்கும் வகையில் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்வை ஆண்டுதோறும் நடத்தி, சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று சிறப்பாக பணி புரிந்து வரும் கலைஞர்களுக்கு கெளரவித்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சி அன்மையில் நடைபெற்றது. இதில், சிறந்த வில்லனுக்கான விருதினை பாக்கியலெட்சுமி தொடரில் கோபியாக நடித்து வரும் சதீஷ் குமார் பெற்றிருந்தார். பாக்கியலெட்சுமி கோபி என்று மட்டுமே அடையாளம் காணும் வகையில் அந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார் சதீஷ் குமார். சதீஷ் தனக்கு கிடைத்த இந்த விருதினை தனது தமிழாசிரியைக்கு சமர்பித்துள்ளார்.
இது தொடர்பில் வீடியோ வெளியிட்டுள்ள சதீஷ், 'என் பக்கத்திலிருப்பது தமிழ் வாத்தியார், தமிழ்த்தாய், தமிழன்னை. நான் இவங்கள் அம்மான்னு தான் கூப்பிடுவேன். 9ஆம் வகுப்பில் என்னை மேடை ஏற்றி நடிக்க வச்சாங்க. இவங்க தான் விதை, இவங்க தான் நீர், இவங்க தான் நிலம். எனக்கு கிடைச்ச பாராட்டு, புகழ், விருதுகளோட மொத்த கிரெடிட்டும் இவங்களுக்கு தான். அவங்க இன்னைக்கு நான் உங்க முன்னாடி நடிகனா நிக்கிறேன்னா, இவங்க தான் காரணம். ' என நெகிழ்ச்சியாக பேசுகிறார்.
சதீஷ் குமார் தனது ஆசிரியை ஒரு அம்மா ஸ்தானத்தில் வைத்து பழகி வருவது அந்த வீடியோவை பார்க்கும் தெரிகிறது. சதீஷ் தனது ஆசிரியை மேல் வைத்திருக்கும் மரியாதை, பாசத்தை பார்க்கும் ரசிகர்கள் சதீஷின் இந்த குணாதிசயத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.