ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் டிஆர்பியில் நல்ல இடத்தை பிடிக்க சில காலங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால், இதற்கெல்லாம் விதிவிலக்காய் 'கயல்' தொடர் ஆரம்பித்த முதல் வாரம் தொடங்கி இதுநாள் வரையில் டிஆர்பியில் டாப் 5 இடத்தில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதிகமுறை முதலிடத்தையும் பிடித்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் நல்ல திரைக்கதையோடு நடிகர்கள் தேர்வு தான்.
நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி தமிழ் குடும்பங்களில் பலரது வீட்டில் செல்ல மகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் தனது பசுந்தோல் போத்திய வில்லத்தனமான நடிப்பால் முத்துராமனும் நடிப்பில் டப் கொடுத்து வருகிறார்.
தற்போது கயல் தொடரில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நாயகியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும், நாயகன் சஞ்சீவ் ரூ.20 ஆயிரமும், வில்லன் பெரியப்பா முத்துராமன் ரூ. 15 ஆயிரமும் சம்பளமாக பெற்று வருகின்றனர். அதிலும் தற்போது சைத்ரா அஜித்தின் வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரும்பியிருப்பதால் அவர் அதிக சம்பளம் கேட்க வாய்ப்புள்ளதாகவும் சின்னத்திரை வட்டாரங்களில் ஒரு பேச்சு வலம் வருகிறது.