எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
தமிழ் சின்னத்திரை நடிகைகளில் முன்னணி இடத்தை பிடித்துள்ளார் சைத்ரா ரெட்டி. சமீபத்தில் வெளியான வலிமை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைத்ராவுக்கு தற்போது ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது. போட்டோஷூட், ரீல்ஸ் என ஆக்டிவாக இருக்கும் சைத்ரா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சக நடிகரான அவினாஷூடன் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற சைத்ரா முகத்தின் மீது, அவினாசின் முழங்கை பலமாக பட்டு விடுகிறது. இதில் சைத்ரா அணித்திருந்த கூலிங் க்ளாஸ் எகிறி விழுந்து விடுகிறது. பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும் இந்த வீடியோவை சைத்ரா ப்ளூப்பர்ஸ் ஸ்டைலில் அப்படியே அப்லோட் செய்துள்ளார். இதை பார்க்கும் அவரது ரசிகர்கள் 'என்ன மேடம்? அடி பலமா?' என ஜாலியாக கிண்டல் அடித்து வருகின்றனர்.
தமிழ் சீரியல் உலகில் 'கல்யாணம் முதல் காதல் வரை', 'யாரடி நீ மோகினி' ஆகிய தொடர்களின் மூலம் அடியெடுத்து வைத்துள்ள சைத்ரா, தற்போது 'கயல்' என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.