'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் டிவி, பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். சன் டிவியின் 'கேளடி கண்மணி' தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமான இவர் தொடர்ந்து 'சுமங்கலி', 'லெட்சுமி வந்தாச்சு' ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இதற்கிடையில், திவ்யா கணேஷூக்கும் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷூக்கும் நிச்சயதார்த்தம் நடந்து. ஆனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களது திருமணம் நின்றது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த அவர், அந்த மோசமான தருணங்களை மிகவும் கஷ்டப்பட்டு கடந்து வருவதாகவும், தன்னை புரிந்துகொள்ளும் ஒரு பார்டனர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய திவ்யா தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்க, திவ்யா கணேஷ் 'மிக விரைவில்' என பதில் அளித்துள்ளார். ஆக மொத்தம் அம்மணிக்கு பார்ட்னர் கிடைச்சாச்சு அது யாரென்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.