இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பழைய சிந்தனைகளை தகர்த்து புதுமையான நிகழ்ச்சிகளான சர்வைவர், ராக்ஸ்டார், சூப்பர் குயின் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களை ஜீ தமிழ் தொலைக்காட்சி வழங்கி வருகிறது. இந்த வரிசையில் அடுத்து சேர்கிறது - 'ரன் பேபி ரன்' என்ற நிகழ்ச்சி. முற்றிலும் மாறுபட்ட ஒரு விளையாட்டு நிகழ்ச்சி.
உடல் மற்றும் மன வலிமை இரண்டும் சேர்ந்த இந்த போட்டாப் போட்டி நிகழ்ச்சியில், இரண்டு அணிகள் களமிறங்கி, சுவாரஸ்யமான சவால்களை எதிர்கொள்வார்கள். வரும் பிப்ரவரி 27 முதல் மதியம் 1:00 மணிக்கு இந்த நிகழ்ச்சியின் முதல் எபிஸோட் ஒளிபரப்பாகவுள்ளது. நகைச்சுவைக்கும், டைமிங் காமெடிக்கும் பெயர் பெற்ற துடுக்கான நடிகர் ஜகன், இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
ஒவ்வொரு வாரமும் ஒரு மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் துறையை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதுவரைக் கண்டிராத கடுமையான போட்டிகளை அவர்கள் சந்திப்பார்கள். ஈமோஜிகளை வைத்து பதில்களை கண்டுபிடித்து மறைந்துள்ள ஒரு பிரபலத்தை அறியும் பந்தையம் துவங்கி, பல்வேறு புதுமையான விளையாட்டுகளை இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் காணலாம்.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் போட்டியாளர்கள் பல பரிசுகளை வெல்லலாம். இருப்பினும்,'டோன்ட் மூவ் சேலஞ்ச்' ஒவ்வொரு சுற்றையும் வெல்லும் அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். இந்த பகுதியின் போது, போட்டியாளர்கள் ஒரு அசைவாலோ அல்லது வெறும் கண் சிமிட்டல் காரணமாகவோ அதுவரை வெற்றி பெற்ற அனைத்தையும் இழக்க நேரலாம். பரபரப்பான ஒவ்வொரு சுற்றிலும் ஆறு போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பரிசுத் தொகையை தட்டிச் செல்ல மோதுவார்கள்.
ரன் பேபி ரன் வரும் பிப்ரவரி 27 முதல், ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 1:00மணிக்குஒளிபரப்பாகவுள்ளது