'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது ராஜா ராணி 2. சந்தியாவின் கனவை நனவாக்க அவரது அண்ணன் சரவணனை உதவ சொல்லி சந்தியாவின் தந்தை கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து அண்ணன் தங்கை செண்டிமெண்ட் ட்ராக் புதிதாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவரது அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சால்சா மணி சீரியலை விட்டு திடீரென விலகியுள்ளார்.
சால்சா மணி எதற்காக சீரியலை விட்டு விலகினார் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. அதேசமயம் சால்சா மணி நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி சித்தார்த் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். இவரும் நல்ல நடிகர் தான். தெய்வமகள் தொடரில் சுரேஷ் என்ற கதாபாத்திரத்திலும், மிஷ்கின் படங்களில் குறிப்பாக துப்பறிவாளன் படத்தில் சூப்பரான கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார். சித்தார்த் வெங்கடேஷ் சரவணன் கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது இனி அந்த கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெறும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.