சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பிரபல சினிமா நடிகையான காயத்ரி ஜெயராம், சின்னத்திரையிலும் சில முக்கிய தொடர்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாகவே ஹிந்தியில் 'ஸ்ரீ கணேஷ்' தொடரில் அம்மனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'கயல்' தொடரில் நெகடிவ் ரோலில் நடித்து வந்த அவர், தற்போது சீரியலை விட்டு விலகுவதாக தனது பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடன் நடித்த சக நடிகர்கள் சஞ்சீவ் கார்த்திக், சைத்ரா ரெட்டி மற்றும் இயக்குனர், கேமரா மேன் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் சீரியலை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
சினிமாவில் பிசியாக வலம் வந்த காயத்ரி ஜெயராம், சின்னத்திரையில் க்ராண் மாஸ்டர், சூப்பர் குடும்பம் உள்ளிட்ட நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 'கயல்' தொடரை விட்டு விலகிய அதேசமயம் கலர்ஸ் தமிழின் 'வள்ளி திருமணம்' தொடரில் கெத்தான ரோலில் நடித்து வருகிறார்.




