கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் ஹிட் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கேற்றார் போல் அந்த ஷோவின் இயக்குநரும் கண்டிப்பாக சீசன் 3 இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டான்சர் சுனிதா மற்றும் டைகர் கார்டன் தங்கதுரை இருவரும் குக் வித் கோமாளி சீசன் 3-க்கான ஷூட்டிங் செட்டில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்த்து ஆரம்பமே அமர்க்களமா இருக்கே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
மேலும், குரேஷி மற்றும் தீபா ஆகியோரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.