இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
விஜய் டிவியில் இதற்கு முன்பு ஒளிபரப்பான சமையல் நகைச்சுவை நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுவரை சீசன் 1, சீசன் 2 ஆகியவை ஒளிபரப்பாகி உள்ளன. தற்போது சீசன் 3க்கான படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இந்த புதிய சீசன் குறித்த புரோமோவை விஜய் டிவி நேற்று வெளியட்டது.
கடந்த சீசனில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், ஷிவாங்கி இருவரும் மற்ற கோமாளிகளைக் காட்டிலும் பிரபலமடைந்தனர். அவர்களுக்கு சினிமாவிலும் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
புதிய புரோமோவில் நிகழ்ச்சியின் நடுவர்கள் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோரும் கோமாளிகள் ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, பாலா ஆகியோரும் பங்கேற்றுள்ளார்கள்.
புதிய சீசனின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதில் பங்குபெறும் கெட்டப்புடன் கோமாளிகளான தங்கதுரை, சுனிதா ஆகியோர் சில புகைப்படங்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சீசன் 3 போட்டியாளர்கள் யார் யார், கோமாளிகள் யார் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.