'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? |

விஜய் தொலைக்காட்சியில் வெற்றியடைந்த சீரியல்களில் ஈரமான ரோஜாவேவும் ஒன்று. ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த தொடரின் இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்புகள் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த சீரியலின் முதல் ப்ரோமோவை தயாரிப்புக் குழுவினர் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட்டனர். அதை பார்த்த பலரும் ஈராமான ரோஜாவே 2 ஹிந்தி சீரியலின் காப்பியா என கேட்டு வருகின்றனர்.
அந்த ப்ரோமோவில், திருமணத்தின் போது மணப்பெண் கடத்தப்பட்டு விடுவதால் குழப்பம் ஏற்பட்டு, மணப்பெண்ணுக்கு பதிலாக அவரது தங்கை கல்யாணம் செய்வது போலவும், அதே போல் மாப்பிள்ளையின் தம்பி, அக்காவான மணப்பெண்ணை கல்யாணம் செய்வது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹிந்தியில் இதே போன்றதொரு கதையம்சத்துடன் 'சசுரல் சிமர் கா' என்ற ஹீரியல் சூப்பர் ஹிட் அடித்திருந்தது. 2,063 எபிசோடுகள் ஒடிய அந்த தொடர் தமிழிலும் 'மூன்று முடிச்சு' என்ற பெயரில் பாலிமரில் டப் செய்து வெளியிடப்பட்டது. இந்த இரண்டு சீரியல்களும் ஒரே மையக்கதையை கொண்டுள்ளதால் ஈராமான ரோஜாவே சீசன் 2 ஹிந்தி சீரியலின் காப்பியா என பலரும் கேட்டு வருகின்றனர். சமீப காலங்களில் தமிழ் தொலைக்காட்சிகள் ஹிந்தி சீரியலை ரீமேக் செய்து எடுத்து வருகிறது. ராஜா ராணி சீசன் 2 கூட ஹிந்தி சீரியலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.