காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்களின் பேவரைட் தொடராக உள்ளது. 700 எபிசோடுகளை கடந்துள்ள இந்த தொடர் விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. தற்போது எதிர்பாரத பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் டிஆர்பியிலும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் பிக்பாஸ் பிரபலமான ரியோ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இதை அந்த தொடரில் நடித்து வரும் ஸ்டாலின் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரியோ இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் வருகிறாரா அல்லது கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா எனபது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் சின்னத்திரையில் ரியோவின் இந்த என்ட்ரியை பலரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.