'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இயற்கை விவசாயம், விவசாயிகளின் பிரச்சினை, ஆடு மாடு வளர்ப்பு பற்றிய கதை களத்தை கொண்ட திரைப்படங்கள் அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளது. அந்த மாதிரியான கதைகளத்தை கொண்ட சின்னத்திரை தொடர்களும் உருவாகிறது.
அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் முத்தழகு. அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடித்த பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் கேரக்டர் பெயர்தான் முத்தழகு. கிராமத்து தெனாவெட்டான பெண். அந்த பெயரையே சீரியலுக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.
முத்தழகு விவசாயத்தையும், கிராமத்து வாழ்க்கையையும் தேர்வு செய்து வாழ்கிறார்கள். அவளது வாழ்க்கையின் ஊடாக விவசாயத்தின் பெருமை, மனிதர்களுக்கும் ஆடு, மாடுகளுக்கும் இருக்கிற பிணைப்பு குறித்து மண்வாசனையுடன் தயாராகி வருகிறது. இதில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்கிறார்கள். படப்பிடிப்பு நடந்து வருகிறது. சீரியல் பற்றிய முதல் கட்ட அறிவிப்பை விஜய் டி.வி வெளியிட்டுள்ளது.