அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க - மீனா | அவதார் 2 : கேட் வின்ஸ்லெட் லுக் அவுட் | வின்னர் 2 உருவாகிறது | 20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி | அதே படம்... அப்பா இசையமைத்த மற்றொரு ஹிட் பாடலை பயன்படுத்திய யுவன் | கமலையும், மம்முட்டியும் இணைக்கும் விஸ்வரூபம் எடிட்டர் | திலீப்பின் பறக்கும் பப்பன் படத்துக்கு இசையமைக்கும் அனிருத் ? | எம்ஜிஆர் பட கதை... ரஜினியின் டைட்டில் ; அசத்தும் நயன்தாரா பட இயக்குனர் | நான் வில்லன் இல்லை ; கடுவா ரகசியம் உடைத்த விவேக் ஓபராய் | குஷ்பு தொடரில் புதிய ஹீரோ |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோ சூர்யா கதாபாத்திரத்தில் புது நடிகர் நடிக்க இருப்பதை தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஓளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் 200 எபிசோடுகளை கடந்து ஓடி வருகிறது. இதில் ஹீரோவாக தர்ஷன் கே ராஜூ நடித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி அவருக்கு பதிலாக மிதுன ராசி சீரியலில் நடித்த சுவாமிநாதன் அனந்தராமன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் இந்த தொடரிலும் நன்றாக நடித்து ரசிகர்களின் மதிப்பை பெற்று வந்தார். இந்நிலையில் எந்தவொரு காரணமும் தெளிவாக தெரியாத நிலையில் அவர் சீரியலை விட்டு விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.