சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
"சமீப காலங்களில், எந்த புதுமுக நடிகருக்கும் கிடைக்காத ஓபனிங், விக்ரம் பிரபுக்கு கிடைத்துள்ளது என்கிறது, "கும்கி படத்தை வாங்கி வெளியிட்ட, நிறுவனம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள் பலரும், கும்கி படம் பார்த்த போது, யானை இறந்த காட்சியில், விக்ரம் பிரபு அழுது நடித்ததை பார்த்து, ஆச்சர்யப்பட்டனராம். ஏனெனில், அந்த காட்சியில், விக்ரம் பிரபுவின் நடிப்பு, அவரது தாத்தா சிவாஜியை நினைவு படுத்தியது போல் இருந்ததாம். பிரபு நடித்து வெளிவந்த சங்கிலி படம் தேவி தியேட்டரில் ரிலீஸ் ஆன போது முதல்நாளே படத்தை பிரபு சென்று பார்த்தாராம். அதேபோல் கும்கி படம் ரிலீஸான தேவி தியேட்டரில் முதல்நாளில் விக்ரம் பிரபுவும் சென்று பார்த்துள்ளார். மேலும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்றும், படத்தின் 8வது ரீலில் கலர் கரைக்சன் மட்டுமே செய்துள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.