இந்தாண்டு ‛நம்ம தீபாவளி' : தீபாவளிக்கு வெளியாகும் ‛லெஜெண்ட்' சரவணனின் புதிய படம் | சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணனின் கண்ணப்பா படத்துக்கு தம்பி பாராட்டு | ராஷ்மிகா கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்ட ரசிகர்கள் | கோவிலுக்கு வந்த நடிகர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி | சுரேஷ் கோபி பட டைட்டில் பிரச்னையில் சென்சார் போர்டுக்கு நீதிமன்றம் கேள்வி | ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2 | நியூமராலஜிபடி பெயரில் திருத்தம் செய்த மீனாட்சி சவுத்ரி | டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் | அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது |
முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இணையாக கலர்ஸ் தமிழ் சேனலும் ரசிகர்களை கவரும் சுவாரசியமான கதையம்சம் கொண்ட சீரியல்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் ஜீவா, ஸ்ரீதா சிவதாஸ் நடிப்பில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் எங்க வீட்டு மீனாட்சி தொடர் பார்வையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த தொடருக்கு கூடுதல் பலமாக பட்டிமன்றம் மற்றும் சினிமாக்களில் சிரிப்பு சரவெடியாக வலம் பேராசிரியர் ஞானசம்பந்தனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவர் இந்த தொடரில் சிதம்பரம் (ஜீவா) படிக்கும் கல்லூரியின் முதல்வராக நடிக்கிறார். நாயகி மீனாட்சி (ஸ்ரீதா சிவதாஸ்) நாயகனுக்கு பாடம் எடுக்கும் பேராசிரியராக நடிக்கிறார். எங்க வீட்டு மீனாட்சி தொடரின் புரோமோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடர் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.