பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

ஏ.எல். விஜய் இயக்கிய தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வரும் கங்கனா ரணாவத், தற்போது சமந்தா - நாகசைதன்யா பிரிந்து விட்டதாக அறிவித்ததை அடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், விவாகரத்து என்றாலே தவறு ஆணின் பக்கம்தான் இருக்கும். பெண்களை ஆடைகளை போன்று பயன்படுத்தி எறிந்து விட்டு பின்னர் அவர்களை தங்கள் நண்பர்கள் போல் என்று கூறிக்கொள்கிறார்கள். நூற்றில் ஒரு பெண் வேண்டுமானால் தவறு செய்யலாம். மேலும், இதுபோன்ற நடிகர்களை ரசிகர்களும் ஊடகங்களும் ஊக்கப்படுத்துவது வெட்கக்கேடானது. நடிகர்களை நியாயப்படுத்தி நடிகைகளை தவறாக சித்தரிக்கிறார்கள். இந்தமாதிரி விவாகரத்து என்பது முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து வருகிறது என்று நாகசைதன்யாவை விமர்சனம் செய்துள்ளார் கங்கனா ரணாவத்.
அதோடு நில்லாமல், தற்போது அமீர்கான் நடிக்கும் படம் மூலம் ஹிந்தியில் நாகசைதன்யா அறிமுகம் ஆவதையும் குறிப்பிட்டு அமீர்கானையும் விமர்சித்துள்ளார் கங்கனா. அதாவது, இந்த நடிகர் பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க் கையை அழித்தார். அப்படிப்பட்டவர் இப்போது நாக சைதன்யாவுக்கு பாலிவுட்டில் வழிகாட்டும் ஒளியாகியிருக்கிறார் என்று அமீர்கானையும் விமர்சனம் செய்திருக்கிறார் கங்கனா ரணாவத்.