எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நான்கு வருட திருமண பந்தம் முடிவதற்குள்ளாகவே தாங்கள் பிரிவதாக பரஸ்பரம் நேற்று அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இவர்களது பிரிவு குறித்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இவர்களே தற்போது அறிவித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. இந்த நிலையில் இவர்கள் அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்தில் சமந்தாவின் நெருங்கிய தோழியான பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அன்பு மட்டும் போதாது என்கிற தலைப்பில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக உங்கள் வருமானம், வரவு-செலவு, மதம், குழந்தைகளை வளர்க்கும் ஸ்டைல், குடும்பத்துடன் எப்படி இணைந்து பயணிப்பீர்கள், குழந்தைகள் மீது எந்த விதமான நம்பிக்கைகளை புகுத்துவீர்கள், உங்களது சிறுவயது அபிலாஷைகள், செக்ஸ் எதிர்பார்ப்புகள், துணை குறித்த எதிர்பார்ப்புகள், பொருளாதார எதிர்பார்ப்புகள், குடும்பத்தினருடைய ஆரோக்கிய விபரம், அவர்களது மன நலம் குறித்த விபரம், அங்கே செய்யவேண்டிய கடமைகள், சொந்த வீட்டுக்கனவு, வேலை, படிப்பு, அரசியல் பார்வைகள் மற்றும் மனதில் என்ன தோன்றுகிறதோ அவையெல்லாம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.. அன்பு மட்டுமே போதாது.." என்று கூறியுள்ளார்.
சமந்தாவின் காதல் திருமணம் இப்படி நான்கு வருடங்களிலேயே முடிவடைந்துள்ளது என்பதாலேயே, காதல் திருமணம் குறித்து இப்படி ஒரு பதிவை சின்மயி வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.