'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' |
கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சமந்தா-நாகசைதன்யா நட்சத்திர தம்பதியினர் நேற்று தாங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக கூட்டாக அறிவித்தனர். இந்த செய்தி தமிழ், தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த பிரிவிற்கான காரணத்தை அவர்கள் இருவருமே தெரிவிக்கவில்லை. அதோடு கடந்த மூன்று மாதங்களாகவே நாகசைதன்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் சமந்தா, தொடர்ந்து சினிமாவில் தான் கவனம் செலுத்தும் நோக்கில் சினிமா, வெப் சீரிஸ் என்று நடிப்பில் கவனத்தை திருப்பியுள்ளார். அதோடு, நாகசைதன்யாவை பிரிவது என்பது பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்பதால் நேற்று இந்த செய்தியை வெளியிட்டது சமந்தாவிற்கு பெரிதாக மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் தொடர்ந்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், நாகசைதன்யாவை விவாகரத்து செய்ய தயாராகிவிட்ட சமந்தாவிற்கு அவரது சார்பில் ரூ.200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்ததாகவும் அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு நான் சினிமாவில் தனித்து வந்து போராடி வெற்றி பெற்றவள். அதனால் என்னால் சுயமாக சம்பாதித்து வாழ முடியும் என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.