'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இருவருமே தாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று கூறி வந்தனர். அதையடுத்து 2019ஆம் ஆண்டில் அனிஷா என்ற பெண்ணுடன் விஷாலுக்கு ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அந்த இடத்தில் தான் தனது திருமணம் நடைபெறும் என்றும் கூறி வந்தார் விஷால்.
ஆனால் பல மாதங்களுக்குப்பிறகு விஷால்-அனிஷா திருமணம் நிச்சயதார்த்தத்தோடு முடிவு பெற்று விட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து விஷாலும் அதை ஒத்துக்கொண்டார். இந்தநிலையில் தற்போது அனிஷா அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதையடுத்து விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யா உள்ளிட்டோர் திருமணம் செய்து கொண்டு குழந்தையே பெற்றுவிட்ட நிலையில், 44 வயதாகும் விஷால் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.