கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
தெலுங்கு நடிகர் சங்கமான 'மா' சங்கத்திற்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 10ம் தேதியன்று நடைபெற உள்ளது. பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மஞ்சு விஷ்ணு தலைமையில் மற்றொரு அணியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். பிரகாஷ் ராஜ் தெலுங்கரல்ல, அவர் ஒரு கன்னடர் என ஆரம்பத்திலிருந்தே எதிரணியினர் அவரைப் பற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் தெலுங்கர் அல்லதான். கர்நாடகாவில் பிறந்தவன்தான் ஆனால், தெலுங்கு மாநிலங்களில்தான் நடிகராக வளர்ந்தவன். 9 நந்தி விருதுகள், 2 தேசிய விருதுகள் என்னிடம் உள்ளன. எதிரணியினரிடம் இத்தனை விருதுகள் உள்ளதா ?. தெலுங்கு மொழி பற்றி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் என்னால் பேச முடியும். எதிரணியில் உள்ளவர்கள் இது குறித்து என்னுடன் போட்டி போட முடியுமா ?.,” என்றும் கேட்டுள்ளார்.
மேலும், “எதிரணியினர் தேவையில்லாமல் தெலுங்கு மாநிலங்களின் இரு முதல்வர்களையும் இந்தத் தேர்தலில் இழுக்கின்றனர். அவர்கள் இருவருமே மிகவும் பிஸியாக உள்ளனர். அவர்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டவும் இல்லை. அவர்களைத் தேவையில்லாமல் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுத்தி இந்தத் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்,” என்றும் குற்றம் சாட்டுகிறார்.