விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா |
குட்டிபுலி, கொம்பன், மருது, கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் தற்போது கார்த்தி நடிக்கும் விருமன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கார்த்தி ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.
இதில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமானார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை தேனியில் படமாக்க முத்தையா, ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் அங்கு சென்றுவிட்டனர். ஆனால் கால்ஷீட் கொடுத்தபடி படப்பிடிப்புக்கு பிரகாஷ்ராஜ் வரவில்லை. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர். பிரகாஷ்ராஜ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஹரி இயக்கும் யானை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிரகாஷ்ராஜ் திடீரென விலகியது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ்ராஜ் பிசியாக இருப்பதால் நடிப்பில் அவர் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.