ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
சாணிக்காயிதம் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள டைரக்டர் செல்வராகவன் அதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன்பிறகு தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட்டரில் தற்போது வெளியிடுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‛‛இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப்போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி'' என்று பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவில் தனியாக இருப்பதே நிம்மதி என்று பதிவிட்டிருப்பதால் ஒருவேளை குடும்ப வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டதின் விளைவாகத்தான் இப்படியொரு பதிவு போட்டுள்ளாரோ? என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.