குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தமிழ் சினிமாவில் நல்ல தலைப்புகளுக்கு எப்போதுமே பஞ்சம்தான். பல தலைப்புகள் பல பஞ்சாயத்துக்களை சந்தித்த பிறகுதான் வெளியில் வந்துள்ளன. முன்பெல்லாம் பல பாடல்களின் வார்த்தைகள் படத் தலைப்புகளாக மாறும். நியாயமாகப் பார்த்தால் அப்படி தலைப்புகளை வைக்கும் போது அந்தப் பாடல்களை எழுதியவர்களிடம் அனுமதி பெற்றோ, அல்லது அதற்கு தகுந்த சன்மானம் கொடுத்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும். அப்படி இதுவரை யாரும் செய்தார்களா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
சமீபத்தில் 'நாய் சேகர்' படத்தின் தலைப்பு ஒரு சர்ச்சையை உருவாக்கியது. 'தலைநகரம்' படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர் தான் 'நாய் சேகர்'. அந்தக் கதாபாத்திரப் பெயருக்கு படத்தின் இயக்குனர் சுராஜ், அந்தக் கதாபாத்திரத்தை இன்றளவும் பேச வைக்கும் வடிவேலு ஆகியோர்தான் சொந்தக்காரர்கள்.
ஆனால், அந்த 'நாய் சேகர்' என்ற பெயரை காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு வைத்துவிட்டார்கள். அடுத்ததாக 'பிரண்ட்ஸ்' படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'கான்ட்ராக்டர் நேசமணி' என்ற கதாபாத்திரப் பெயரை மற்றொரு காமெடி நடிகரான யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு வைத்துள்ளார்கள்.
சதீஷ், யோகி பாபு இருவருமே கடந்த சில வருடங்களாக காமெடி நடிகர்களாக ஓரளவிற்குப் பெயர் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பு நடித்த படங்களின் கதாபாத்திரப் பெயர்களை வைக்காமல் சீனியர் காமெடி நடிகரான வடிவேலு நடித்த கதாபாத்திரப் பெயர்களை வைப்பது சரியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அப்படியென்றால் சதீஷ், யோகி பாபு இருவரும் நடித்த படங்களின் கதாபாத்திரப் பெயர்கள் மக்கள் மனதில் பதியவில்லை என்றுதானே அர்த்தம் என கோலிவுட்டில் கேட்கிறார்கள்.
வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர்கள் இரண்டு புதிய படங்களுக்கு வைக்கப்பட்டுவிட்டது. இந்நேரம் மற்ற கதாபாத்திரப் பெயர்களை தங்களது புதிய படங்களுக்காக எத்தனை பேர் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்களோ ?.