காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தெலுங்கில் நாகசைதன்யா, சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் செப்டம்பர் 24 ல் வெளியாக இருக்கிறது. தனுஷின் முதல் நேரடி தெலுங்கு படத்தை இயக்க உள்ள இயக்குனர் சேகர் கம்முலா தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா, மனைவியான சமந்தா ஆகிய இருவருமே வரவில்லை. அதே சமயம் சிரஞ்சீவியும், பாலிவுட்டிலிருந்து நடிகர் ஆமிர்கானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாகசைதன்யா தற்போது ஹிந்தியில் ஆமிர்கானுடன் லால் சிங் சத்தா என்கிற படத்தில் இணைந்து நடித்து வருகிறார். அந்த நட்பின் அடிப்படையில் ஆமீர்கான் வந்து கலந்து கொண்டாலும், இந்த நிகழ்ச்சிக்கு அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையாம். நிகழ்ச்சி துவங்குவதற்கு முதல் நாளன்று லவ் ஸ்டோரி படத்தின் டிரைலரை பார்த்து ரொம்பவே இம்ப்ரஸ் ஆன ஆமிர்கான், நாக சைதன்யாவுக்கு போன் செய்து நானும் இந்த விழாவில் கலந்து கொள்ள வரலாமா எனக்கேட்டு அதன் பின்னரே ஐதராபாத்துக்கு பறந்து வந்தாராம்.