அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் சார்பில் நிறைய மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். அதோடு, நீட் தேர்வுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 12-ந்தேதி நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பே ஏற்பட்ட பயத்தில் தனுஷ் என்ற மாணவனும், நீட்தேர்வு எழுதிய பிறகு கனிமொழி என்ற மாணவியும் பயத்தில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சோசியல் மீடியாவில் மாணவர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார் சூர்யா.
அப்படி அவர் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‛என் தம்பி தங்கைகளுக்கு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே,' என்ற பாரதியாரின் வரிகளுடன் தொடங்கி அறிவுரை வழங்கியிருக்கிறார். மருத்துவராக வேண்டும் என்று நினைக்கும் மாணவ மாணவிகள் நீட் தேர்வை கண்டு அஞ்சக் கூடாது. அதற்கு மரணம் எந்த நிலையிலும் தீர்வாக முடியாது. இந்த ஆண்டு இல்லையென்றால் அடுத்த ஆண்டு வெற்றி பெற்றுக்கொள்ளலாம் என்கிற மனநிலையுடன் நீங்கள் செயல்படவேண்டும். உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாரதியார் சொன்னது போன்று அச்சமின்றி துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளும் மனநிலை பெற வேண்டும்.
ஒரு பரீட்சை என்பது கண்டிப்பாக உங்கள் உயிரோடு பெரிதல்ல, போன வாரம், போன மாதம் இருந்த ஒரு கவலையானது இப்போது உங்களை விட்டு போயிருக்கும். அதேபோல்தான் எந்த கவலையும் ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடும். அதோடு இதுபோன்ற நேரங்களில் பெற்றோர், பெரியவர்கள், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நான் கூட இதுபோன்ற தோல்விகளை படிக்கிற காலத்தில் சந்தித்துள்ளேன். கேவலமான மதிப்பெண் பெற்றுள்ளேன். ஆனபோதும் நான் நம்பிக்கையை மட்டும் கைவிட்டதில்லை.
அதனால் உங்களை துரத்தும் அச்சம், கவலை எல்லாமே படிப்படியாக மாயமாக போய் விடும். துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளுங்கள் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று மாணவ- மாணவிகளுக்கு ஒரு அண்ணனாக அறிவுரை வழங்கியிருக்கிறார் சூர்யா.