Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"பொன்னியின் செல்வன்" படப்பிடிப்பு நிறைவு - அடுத்தாண்டு கோடையில் முதல்பாகம் ரிலீஸ்

18 செப், 2021 - 20:07 IST
எழுத்தின் அளவு:
Ponniyin-Selvan-Shooting-wrapped---releasing-next-year-summer

கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். எம்ஜிஆர்., கமல்ஹாசன் தொடங்கி பல ஜாம்பவான்கள் இதை படமாக எடுக்க நினைத்து கைவிட்டனர். இயக்குனர் மணிரத்னம் இதை படமாக்க போவதாக இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார். கொரோனா உள்ளிட்ட பல பிரச்னைகளை தாண்டி நடந்து வந்த இதன் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துவிட்டது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ரகுமான், விக்ரம் பிரபு, அஸ்வின், லால், நாசர் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்ச்செலவில் சுமார் ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத், மத்திய பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துள்ளது. அடுத்தப்படியாக படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் துவங்க உள்ளன. பொன்னியின் செல்வன் முதல்பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகிறது. இதற்கான அறிவிப்பை புதிய போஸ்டர் ஒன்று மூலம் வெளியிட்டுள்ளனர். கூடவே புதிய போஸ்டரில் பொன்னியின் செல்வன் தலைப்பு தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கோயிலில் கேள்வி கேட்ட நிருபரை 'புத்தி இருக்கா' எனத் திட்டிய சமந்தாகோயிலில் கேள்வி கேட்ட நிருபரை ... கொரோனா குமார்-ஆக மாறிய சிம்பு கொரோனா குமார்-ஆக மாறிய சிம்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

19 செப், 2021 - 21:08 Report Abuse
கணபதி இப்படம் தோல்விப்படமாக மாறி கல்கி எனும் மாமனிதர் எழுதிய கதையை சிதைக்கப் போகிறது.
Rate this:
VNS - chennai,இந்தியா
18 செப், 2021 - 22:36 Report Abuse
VNS ஐரோப்பியர்கள் பயன்படுத்துற கத்தி மாதிரி இருக்கு. தமிழன் கத்தி மாதிரி இல்லை. இன்னும் என்னென்ன திரிபோ ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in