2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கதிர், வேல ராமமூர்த்தி அறிமுகமான மதயானைகூட்டம் படத்தை இயக்கியவர் விக்ரம் சுகுமாரன். படத்தை விமர்சகர்கள் பாராட்டினாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கி இருக்கும் படம் இராவணக் கோட்டம்.
இதில் சாந்தனு, ஆனந்தி, பிரபு, சத்யா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணிபுரிந்து வருகிறார். கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். நிறைவு நாளில் சாந்தனுவின் தந்தையும், இயக்குனருமான கே.பாக்யராஜூம் கலந்து கொண்டு மகனை வாழ்த்தினார்.