அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமீப ஆண்டுகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
'பிக்பாஸ் 5' நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 'இந்த வீட்டில் கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல...' என்று பேசும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.