டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

உலகளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான ‛சர்வைவர் நிகழ்ச்சி முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. செப்., 12 முதல் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் அர்ஜூன் முதன் முறையாக இந்நிகழ்ச்சி மூலம் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபர் தீவில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். விக்ராந்த், உமாபதி ராமைய்யா, நந்தா, பெசன்ட் ரவி, நடிகைகள் விஜயலட்சுமி, சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, விஜே பார்வதி ஆகிய 8 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 10 போட்டியாளர்களில் 8 போட்டியாளர்கள் விபரம் கடந்த ஞாயிறு அன்று போட்டியின் துவக்க நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டனர்.
![]() |
அதன்படி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், பிகில் படத்தில் நடித்தவருமான இந்திரஜா, ‛வடசென்னை, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரண் சக்தி, நடிகை லக்ஷமி ப்ரியா, நடிகர் ராம் சி, நடிகர் லக்கி நாராயணன், விளையாட்டு வீராங்கனை ஐஸ்வர்யா கிருஷ்ணன், சிங்கப்பூரை சேர்ந்த பாடகி லேடி காஷ், நடிகர் அம்ஜத் கான் என மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இன்னும் இரண்டு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் களமிறங்க உள்ளனர்.
![]() |