பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் சமந்தா - நாகசைதன்யா விவாகரத்தா என்பதுதான் கடந்த சில வாரங்களாக முதன்மை கிசுகிசுவாக இருந்து வருகிறது. தனது மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்து கூறியிருந்தாலும் அதற்கு நாகார்ஜுனா பதிலளிக்கவில்லை. அதனால், அவர்கள விவகாரத்து கிசுகிசு உண்மை தான் போல என்றும் ரசிகர்களும், மீடியாக்களும் நினைத்தார்கள்.
இந்நிலையில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நாகசைதன்யா டுவிட்டரில் பகிர்ந்த அந்தப் பதிவை ரிடுவீட் செய்து, படத்தின் நாயகி சாய் பல்லவியை மட்டும் 'டேக்' செய்து, 'வின்னர், குழுவினருக்கு நன்றி' என சமந்தா வாழ்த்தியிருந்தார். அதில் கூட அவர் நாகசைதன்யாவை ஏன் 'டேக்' செய்யவில்லை, அவருக்கென தனியாக ஏன் வாழ்த்து கூறவில்லை என்ற சந்தேகமும் கிளம்பியது.
சமந்தா நேற்று மாலை பதிவிட்ட அந்த வாழ்த்திற்கு நாக சைதன்யாவும் உடனடியாக பதில் தெரிவிக்கவில்லை. எனவே, வழக்கம் போல விவாகரத்து கிசுகிசு இறக்கை முளைத்து பறந்தது. இந்நிலையில் இன்று காலை சமந்தாவிற்கு நன்றி தெரிவித்து 'நன்றி சாம்' என பதிலளித்துள்ளார் நாக சைதன்யா. ஆனால், அந்த பதிலுக்கும் பல ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பி கேள்வி கேட்டு வருகின்றனர்.
சமந்தா - நாக சைதன்யா இருவரும் வெளிப்படையாக இது பற்றி அறிவிக்கும் வரை 'விவாகரத்து கிசுகிசு' வந்து கொண்டுதான் இருக்கும்.




