நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சதீஷ். பிரபல வசனகர்த்தா கிரேசி மோகனிடம் 8 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றிய இவர், பாண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு மதராசபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார். தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சதீஷ் நடித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு ஆண்டு சிக்சர் படத்தின் இயக்குநரான சாச்சியின் தங்கை சிந்துவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் நடிகர் சதீஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் புகைப்படம் ஒன்றை பதிவு விட்டுள்ளார். அதில் படப்பிடிப்பிற்காக வெளியூர் செல்லும் சதீஷின் சூட்கேசின் மீது படுத்துக் கொண்டு இருப்பது போன்று புகைப்படங்ளில் இருக்கிறது. இது குறித்து பதிவிட்டுள்ள அவர், 'பெங்களூர் போங்கோ, காஷ்மீர் போங்கோ, மும்பை போங்கோ, எங்கே போனாலும் என்னையும் கூட்டிட்டு போங்கோ, அப்பா' என்று கூறுவது போன்ற கேப்ஷனை சதீஷ் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது