சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கன்னடத்தில் போதிய வாய்ப்பில்லாததால் தெலுங்கு பக்கம் வந்த ராஷ்மிகா, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிவிட்டார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட், நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
தற்போது இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான கார்த்தியின் 'சுல்தான்' படத்திலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அண்மையில் கூட இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய நடிகைகளை ஓரங்கட்டி சாதனை படைத்தார்
இந்நிலையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.