வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு கடந்த மாதம் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் முதல் இரண்டு வாரங்களில் வெளிவரவில்லை. கடந்த வாரம் தான் விஜய் சேதுபதி நடித்த 'லாபம்', கங்கனா நடித்த 'தலைவி' ஆகிய இரண்டு முக்கிய படங்கள் வெளிவந்தன.
அந்த இரண்டு படங்களையும் பார்க்க மக்கள் வருகை எப்படி இருந்தது என்பது குறித்து தியேட்டர் வட்டாரங்களில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் மிகவும் வருத்தத்துக்குரியதாக இருந்தது.
50 சதவீத இருக்கைகளுக்கே கடந்த மூன்று நாட்களாக விடுமுறை நாட்களாக இருந்தும் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகள் நடைபெறவில்லை. சில ஊர்களில் சில தியேட்டர்களில் மட்டும் அரங்கு நிறைந்த காட்சிகள் நடைபெற்றுள்ளது. அதுவும் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும்தானாம்.
வார இறுதி நாட்களில் அரங்கு நிறையும் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கூட எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்களைச் சொல்கிறார்கள். 'லாபம், தலைவி' ஆகிய இரண்டு படங்களுக்கும் வெளிவந்த விமர்சனங்கள் ஒரு பக்கம், அந்தப் படங்கள் எப்படியும் ஒரு மாதத்தில் ஓடிடி தளத்தில் வந்துவிடும் என்பது மற்றொரு பக்கம் என தியேட்டர்களுக்கு மக்கள் வராததற்குக் காரணமாகக் கூறுகிறார்கள்.
மேலும், மக்கள் கொரோனா அச்சத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதும் தெரிகிறது என்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த', அஜித் நடித்துள்ள 'வலிமை' மாதிரியான பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும் போதுதான் மக்கள் வருகையை அதிகம் எதிர்பார்க்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.
மக்களை தியேட்டர்களுக்கு பழையபடி வரவழைக்க தியேட்டர்காரர்கள் ஏதாவது சலுகைகளை அறிவிப்பது அல்லது டிக்கெட் கட்டணங்களைக் குறைப்பது போன்று ஏதாவது செய்ய வேண்டும் என திரையுலகத்தில் உள்ள அனுபவசாலிகள் தெரிவிக்கிறார்கள்.
திரையுலகத்தைச் சேர்ந்த முக்கிய சங்கங்கள் இது குறித்து உடனடியாக அமர்ந்து பேசி ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.