எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'தலைவி'. மறைந்த முதல்வர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எனச் சொல்லி கற்பனை கலந்த காட்சிகளுடன் படத்தை உருவாக்கியது படத்திற்கான தரத்தைக் குறைத்துவிட்டதாகவே பலரும் கருதுகிறார்கள். பயோபிக் படமாகவும் இல்லாமல் சினிமாத்தனமான படமாகவும் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியது தவறு என்று படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பார்த்த ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
50 சதவீத இருக்கைகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் வெளியீடு இல்லை, முக்கிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஹிந்தி வெளியீடு இல்லை ஆகிய சிக்கல்களுடன் மூன்று மொழிகளில் வெளிவந்த இந்தப் படம் மோசமான வசூலையே பெற்றுள்ளது.
முதல் நாள் வசூலாக சுமார் 1.2 கோடி, இரண்டாம் நாள் வசூலாக 1.6 கோடி, மூன்றாம் நாள் வசூலாக நேற்று சுமார் 2 கோடி வந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முதல் வேலை நாட்கள் என்பதால் வசூல் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் சொல்கிறார்கள்.
ஹிந்தியில் இரண்டு வாரங்களில் ஓடிடி ரிலீஸ், தமிழில் நான்கு வாரங்களில் ஓடிடி ரிலீஸ் என்பதால் படத்தை பொறுமையாக ஓடிடியில் பார்த்துக் கொள்வோம் என ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கிறார்கள் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான 'நடிகையர் திலகம்' வசூலை விடவும் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தின் வசூல் 'என்டிஆர்' பயோபிக் போல ஏமாற்றத்தைத் தந்துவிட வாய்ப்புகள் அதிகம் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.