இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் முதல்நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில் நீங்கள் என்னை நிரப்பும் மகிழ்ச்சி கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் உன்னை நான் நேசிக்கிறேன் அன்பே நைக்“ என்று தன்னுடைய செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் நாய்க்குட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.