நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அட்லீ சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கானை சந்தித்து கதை கூறியுள்ளார். அது ஷாருக்கானுக்கு பிடிக்கவே நடிக்க சம்மதித்துள்ளார். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது அந்தப் படம் துவங்கி உள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ராவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது நடிகை பிரியாமணி இணைந்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பிரியாமணி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக அவர் ஷாருக் உடன் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பு புனேவில் நடக்கிறது. நடிகைகள் நயன்தாரா மற்றும் ப்ரியாமணி புனே விமான நிலையத்தில் காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.