ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
கொரோனா அலைகளின் காரணமாக தியேட்டர்களைத் தவிர்த்து ஓடிடி தளங்களில் நேரடியாக புதிய படங்களை வெளியிடும் முறை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களை ஓடிடி தளங்களில் 50 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தை தியேட்டர்களில் வெளியான இரண்டு வாரங்களில் ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான உரிமையை விற்றிருந்தனர். இந்நிலையில் படத்தைத் தியேட்டர்களில் திரையிட அவர்கள் அணுகிய போது அதற்கு தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தைத் திரையிட மாட்டோம் என்றனர்.
அதற்கான பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தியேட்டர் உரிமையாகர்கள் எடுத்த முடிவு பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஓடிடியில் வெளியான படங்களை பின்னர் தியேட்டர்களில் வெளியிட அனுமதிப்பதில்லை, ஓடிடியில் விற்கப்படும் படங்களுக்கு பிரிவியூ காட்சிகளுக்குத் தியேட்டர்களைக் கொடுக்க மாட்டோம், தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடும் படங்களை மட்டுமே தியேட்டர்களில் திரையிடுவோம் என அவர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். மேலும், ஓடிடிக்கென தனியாக படங்களைத் தயாரித்துக் கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்களாம்.
இதனால், 'தலைவி' படம் தியேட்டர்களில் வெளியாக முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படத்தை இரண்டு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுவதற்கான உரிமையை ஏற்கெனவே விற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.