'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் ஆகிய ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமா உலகில் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது பற்றிய பல துறைகளின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
தற்போது அமலாக்கப் பிரிவு இது குறித்த விசாரணையை தெலுங்குத் திரையுலக பிரபலங்களிடம் நடத்தி வருகிறது. தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் நேற்று விசாரணைக் குழுவினர் முன் ஆஜரானார். இந்த வழக்கில் 12 தெலுங்கு சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களிடம் 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. நேற்று அவற்றை பூரி ஜெகன்னாத் விசாரணைக் குழுவிடம் அளித்துள்ளார். நேற்று அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இன்று பூரி ஜெகன்னாத் உடன் சினிமா தயாரிப்பாளராக இருக்கும் நடிகை சார்மி அமலாக்கப் பிரிவு முன் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு விசாரணைக்கு ஆஜராகும் போது காவலர் ஒருவர் தன்னைத் தொட்டார் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார் சார்மி. அதனால், இந்த முறை முழுவதும் பெண் காவலர்களை பாதுகாப்பிற்கு நிறுத்த உள்ளார்களாம்.
இந்த விசாரணை விவகாரங்களால் டோலிவுட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.