நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

நடிகர் விஷால் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், தயாரித்து நடிக்க ஆரம்பித்த படம் 'துப்பறிவாளன் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு ஆரம்பமாகி ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்தது. படத்திற்கு மிஷ்கின் அதிக பட்ஜெட் இழுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் அப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின். விஷால் தானே படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், அதன்பின் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்கவில்லை.
அதற்குப் பிறகு அவர் நடித்த 'ஆக்ஷன், சக்ரா' ஆகிய படங்கள் வெளிவந்துவிட்டன. 'எனிமி' என்ற படத்தில் விஷால் நடித்து முடித்துவிட்டார். அடுத்து 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவற்றோடு தனது 32வது படத்தில் இன்று நடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். 'துப்பறிவாளன் 2' படம் மேற்கொண்டு நடக்குமா நடக்காதா என்பது குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை.
'துப்பறிவாளன்' படத்தின் முதல் பாகம் 2017ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 'துப்பறிவாளன் 2' படத்தை விட்டு விலகிய பிறகு தான் ஆரம்பித்த, 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் இன்று முடித்துவிட்டார்.




