'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கதைக்கு தேவை என்றால் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் இருக்கும் நடிகர்களுடனும் நடிக்கத் தயங்க மாட்டார். இது கதிர்வேலன் காதலில் உதயநிதி, மாயாவில் ஆரி, டோராவில் ஹரிஷ் உத்தமன், திருநாளில் ஜீவா, ஐராவில் கலையரசன் இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து நயன்தாராவுடன் நடிப்பவர் விதார்த்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நயன்தாரா. இதில் எலி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் இயக்கும் படமும் ஒன்று. ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது. இதில் விதார்த் மற்றும் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீ நடித்து வருகிறார்கள். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அந்த படத்திற்கு பிறகு இதில் நடிக்கிறார். இதில் நயன்தாராவுக்கு உதவும் நண்பர்களாக விதார்த்தும், ஸ்ரீயும் நடிப்பதாக கூறப்படுகிறது.