நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ஆர்யா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான படம் மகாமுனி. இதில் இந்துஜா, மகிமா நம்பியார், காளி வெங்கட், ரோகினி உள்பட பலர் நடித்திருந்தார்கள். சாந்தகுமார் இயக்கி இருந்தார். ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்த படம் தமிழ்நாடு தியேட்டர்களில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் தற்போது சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த மகிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து மகிமா டுவிட்டரில், “மகாமுனி படத்தில் நடித்ததற்காக மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை. படத்தின் இயக்குனர் சாந்தகுமாருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
மகிமா நம்பியார் நடித்து முடித்துள்ள ஐங்கரன், ஓ மை டாக், பெல்பாட்டம் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. தற்போது பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து வருகிறார்.