ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
'எனிமி' படத்திற்கு பிறகு குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். விஷாலின் 31வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். படத்திற்கு வீரமே வாகை சூடும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் விஷால் சிலரை அடித்து துவம்சம் செய்து மிரட்டல் பார்வையுடன் காணப்படுகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் துவங்கியது. ஒரே கட்டமாக குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்கப்பட்டு, தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சமர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.