ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

விஷால் நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அங்குள்ள முதியவர்களுக்கு, குழந்தைகளுக்கு உணவளித்து, தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்திருக்கிறேன். பிறந்த நாளன்று நிறைய நல்ல விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடிக்கிறேன். தயவுசெய்து போஸ்டர்கள், கட்-அவுட்கள் வைக்காதீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வடிவேலு மீண்டும் நடிக்க வருவதில் எனக்கு மகிழ்ச்சி. தமிழ் திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஜிஎஸ்டி வரி, உள்ளாட்சி வரி இரண்டையும் கட்டும் ஒரே மாநிலம் தமிழகம். அதை மாற்றினால் நன்றாக இருக்கும்.
தயாரிப்பாளர்கள் படத்தை உருவாக்கிவிட்டு, திரையரங்குகளா? ஓடிடி தளங்களா என்று திண்டாடுகின்றனர். இனி திமுக ஆட்சியில் திரையுலகிற்கு நல்லது நடக்கும். . கண்டிப்பாக திரைத்துறைக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்கள் விரைவில் திரையரங்குகளுக்கு திரும்புவார்கள்.
வழக்கு நடந்து கொண்டிருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் சங்கத்திற்கு யாருக்கும் உதவி செய்ய முடியவில்லை. இந்த நிலை மாறும்.
இவ்வாறு விஷால் கூறினார்.