'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபத்தில் கடந்து சென்ற சர்வதேச நாய்கள் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களுடைய செல்லப்பிராணிகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விலங்குகளை நேசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். அந்த வகையில் நடிகை கனிகா தனது செல்லப்பிராணியான மேகி என்கிற நாயுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நாய் வளர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் தயவு செய்து நாய்களை விலைக்கு வாங்கும் பொருளாக கருதாதீர்கள், நாய்களை தத்தெடுத்து அவற்றையும் நம் வீட்டில் உள்ள ஒரு ஜீவனாக பாவித்து அன்பு செலுத்தி வளருங்கள். நம்மீது நம்பிக்கை வைத்து அளவில்லா அன்பை திருப்பி செலுத்தும் அந்தப் பிராணி கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று கூறியுள்ள கனிகா நாய்களை எங்கே தத்தெடுக்கலாம் என்கிற விபரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.