ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நடிகை ராதிகா சினிமாவுக்கு வந்து 43 ஆண்டுகள் ஆகிறது. அவரது முதல் படமான கிழக்கே போகும் ரெயில் படத்தின் படப்பிடிப்புகள் பழனி மற்றும் தேனி பகுதியை சுற்றி நடந்தது. தற்போது அவர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பழனியை சுற்றி நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு ராதிகா நடித்து வருகிறார்.
படப்பிடிப்பின் இடைவெளியில் ராதிகா பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பான படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர். "பழனி முருகன் கோவிலுக்கு வருவது எப்போதுமே எனக்கு சிறப்பானது. பாசிட்டிவான உணர்வுகளை இங்கு நான் பெறுவேன். இந்த முறை கோவிலுக்கு சென்றபோது எனது பழைய நினைவுகள் மனதில் ஓடியது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.




