சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஒருங்கிணைந்து ரெய்ன் ஆன் பிலிம்ஸ் என்ற கூட்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். மணிரத்னம், சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின், லிங்குசாமி, சசி, கவுதம் மேனன், வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் இதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற தகவல் வெளியானது. அவரது படத்தில் சூர்யா நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்.
லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். சூர்யா வெற்றி மாறனின் வாடிவாசல், பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கமிட்மெண்டுகளை முடித்துவிட்டு இந்த படத்தை தொடங்க இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே சூர்யாவிடம் சொல்லி ஓகே ஆகியிருந்த கதை இது. முதலில் இதனை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இப்போது ரெயின் ஆன் பிலிம்சுக்கு மாறி உள்ளது. என்கிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.