சப்தம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதோ | விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியானது | சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நிறைவு | அதிரடியாய் எடை குறைத்த அறந்தாங்கி நிஷா! | 'புஷ்பா 2' - இந்தியாவில் மட்டும் 1300 கோடி வசூல் | எதிர்பார்ப்பை எகிற வைத்த சிந்து பைரவி புரோமோ! | பவுஸி ஹிதாயா நடிக்கும் புதிய தொடர் | எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : கமல்ஹாசன் இரங்கல் | எதிர்நீச்சல் 2வில் என்னை ஏமாத்திட்டாங்க! | ஹைதராபாத்தில் 'விடாமுயற்சி' டப்பிங்கை முடித்த அஜித் குமார் |
கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் வெளிவந்த 'முப்டி' என்ற படத்தை தமிழில் ரீமேக் படமாக சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க 2019ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்தப் படக்குழுவை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் சிம்பு வெளியேறியதாக தகவல் வெளியானது. அதன்பின் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவேயில்லை. தொடர்ந்து நடந்த பஞ்சாயத்துகளுக்குப் பிறகு சிம்பு மீண்டும் நடிக்க சம்மதித்தார்.
அதன்பின் படத்தை ஆரம்பத்தில் இயக்கிய நார்தன் படத்தை விட்டு விலகினார். அவருக்குப் பதிலாக 'சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
'பத்து தல' என படத்திற்குப் பெயர் வைத்து அதன் போஸ்டரை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானை வைத்து வெளியிட்டார்கள். சிம்புவின் மற்ற படங்களுக்கான பழைய பஞ்சாயத்துகள் சமீபத்தில்தான் முடிந்தது. அதனால், இப்படத்தையும் சிக்கலில்லாமல் இன்று முதல் ஆரம்பித்திருக்கிறார்கள்.
படத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ஒரு புதிய ஆரம்பம், நீண்ட நாட்களாக நான் காத்திருந்த ஒரு பயணத்தின் ஆரம்பம், முதல் நாள், பத்து தல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்படும் என்று தெரிகிறது. 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துக் கொண்டே இப்படத்திலும் சிம்பு நடிக்க உள்ளாராம்.