டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3-ல் முக்கிய ஜோடியாக வலம் வந்த மணிகண்டன் சோபியா தம்பதியினர் நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளனர்.
விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிசஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக வலம் வந்தவர்கள் சோபியா - மணிகண்டன் ஜோடி. இந்நிலையில் அவர்கள் திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியானது. நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து பேசிய சோபியா, “தாமதமாக பதிலளிப்பதற்காக மன்னனித்து விடுங்கல். நாங்கள் ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 3ல் பங்கேற்கவில்லை என அதிகம் அன்புடன் மெசேஜ்கள் வந்தன. எனக்கு சில மெடிக்கல் பிரச்சனைகள் வந்ததால் மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்க அட்வைஸ் செய்தார்கள். அதனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் வெளியேறினோம். கண்டிப்பாக வைல்டு கார்டு ரவுண்டில் நாங்கள் வருவோம்.” என கூறியுள்ளார்.
சோபியா - மணிகண்டன் நிகழ்ச்சியிலிருந்து விலகியது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும், சோபியாவின் விளக்கம் அவரது ரசிகர்களை வைல்டு கார்டு ரவுண்டிற்காக காத்திருக்க வைத்துள்ளது.